குறைந்த செலவில் சூழல் சுற்றுலா - சுற்றுலா தலமாகும் பரளிக்காடு!
Sep 10, 2025, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குறைந்த செலவில் சூழல் சுற்றுலா – சுற்றுலா தலமாகும் பரளிக்காடு!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளிக்காடு கிராமம் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாறி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலுடன் குறைந்த செலவில் நாள் முழுவதும் சுற்றிப்பார்க்கும் இடங்கள் அடங்கிய இந்த சூழல் சுற்றுலாவை இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகம் மற்றும் கேரள வனப்பகுதிகளை இணைக்கக் கூடிய அடர் வனத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மலைக் கிராமமான பரளிக்காடு தான் தற்போதைய சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்திற்குரிய இடமாகத் திகழ்ந்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் இப்பகுதியில் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டும் நடத்தப்படும் சூழல் சுற்றுலாவுக்குப் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

குறைந்த செலவில் நாள் முழுவதும் வனப்பகுதியில் எழில் கொஞ்சும் இயற்கையுடன் உலாவும் சூழலை அனுபவிக்க விரும்பி வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வரவேற்பு தேநீரில் தொடங்கி படகு சவாரி, பவானி ஆற்றில் குளியல் எனப் புதுவித அனுபவங்களை இந்த சூழல் சுற்றுலா ஏற்படுத்தித் தருகிறது.

மலைவாழ் மக்களின் உதவியோடு மேற்கொள்ளப்படும் படகு சவாரியின்போது கரையின் இருபுறங்களிலும் வானுயர நிமிர்ந்து நிற்கும் மரங்கள், செடி, கொடிகளோடு வனவிலங்குகளும் தென்படுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலாவில், இயற்கையின் கொடையாக உள்ள ஆறுகள் மற்றும் மரங்கள் குறித்து விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது.

இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர், காரமடை வனச்சரக அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் சுற்றுலாவுக்கான கட்டணமாகச் சிறுவர்களுக்கு 500 ரூபாயும், பெரியவர்களுக்கு 600 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறக்கூடிய கட்டணங்கள் அனைத்தும் அங்கிருக்கும் மலைவாழ் மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுவது அனைவராலும் வரவேற்கக் கூடியதாக அமைந்துள்ளது.

Tags: Eco-tourism at a low cost - Paralikadhu becomes a tourist destination- சுற்றுலா தலமாகும் பரளிக்காடுசூழல் சுற்றுலா
ShareTweetSendShare
Previous Post

தலைமைச் செயலகம் முன்பு போராட முயன்ற மாற்றுத்திறனாளிகள் குண்டுகட்டாக கைது!

Next Post

கர்நாடக முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தி கொலை – எமனாக மாறிய மனைவி!

Related News

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

கனடா : குழந்தைகள் காரை சாலையில் ஓட்டி வந்த நபர் கைது!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies