கர்நாடக முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தி கொலை - எமனாக மாறிய மனைவி!
Aug 8, 2026, 05:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கர்நாடக முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தி கொலை – எமனாக மாறிய மனைவி!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 07:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவின் ஓய்வு பெற்ற டிஜிபி ஓம் பிரகாஷ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த கொலைக்கான பின்னணி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பீகாரில் உள்ள சம்பாரணைச் சேர்ந்த 68 வயதான ஓம் பிரகாஷ், 1981 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார்.  புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், ஹரப்பனஹள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகத் தனது காவல் பணியைத் தொடங்கியுள்ளார். பல்லாரியில் ஏஎஸ்பியாகவும், சிவமோகா, உத்தர கன்னட மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களில் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.

கர்நாடகா மாநில வீட்டுக் காவல் மற்றும் தீயணைப்பு, அவசர சேவைகள் மற்றும் போக்குவரத்து ஆணையராகவும் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம், கர்நாடக லோக்ஆயுக்தா மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ள ஓம் பிரகாஷ்  கார்வார் மாவட்டத்தின் பட்கல் பகுதியில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களைக் கையாண்ட வகையில் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர் ஆவார்.

மேலும், 2015 முதல் 2017ம் ஆண்டு ஓய்வு பெரும் வரை கர்நாடக மாநில காவல்துறை இயக்குநராகவும் இருந்துள்ளார்.  பெங்களூருவின் ஆடம்பரமான எச்எஸ்ஆர் லே-அவுட் என்ற பகுதியில், மூன்று மாடி வீட்டில்  தனது மனைவி பல்லவி மற்றும் மகள் கிருத்தியுடன்  வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிக்குப்  போன் செய்து, தான் ஒரு அரக்கனை  கொன்று விட்டதாக ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி கூறியுள்ளார். பின்னர், பல்லவியே  கொலை சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, காவல்துறையினர், விரைந்து சென்று பார்த்த போது, வீட்டின் தரை தளத்தில் ஓம் பிரகாஷ்,  கத்திக்குத்து காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். சம்பவம் நடந்த நேரத்தில்,அவரது மனைவி பல்லவி மற்றும் மகள் வீட்டில் இருந்துள்ளனர்.

எந்த வித பதற்றமும் இல்லாமல்,கணவரைக் கொன்று விட்டதாக, பல்லவி தெரிவித்திருக்கிறார். விசாரணையில், ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினர் இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப்பில் பல்லவி ஒரு அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.  அதில், “ஓம் பிரகாஷ் வீட்டில் துப்பாக்கியுடன் சுற்றுவதாகவும், எந்த நேரத்திலும் அவர் தன்னைக்   கொன்று விட  வாய்ப்புள்ளதாகப் பல்லவி  பதிவிட்டுள்ளார்.

இதனால், தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, கணவரைத்  தீர்த்துக் கட்டியதாகப்  பல்லவி தெரிவித்துள்ளார்.  கடந்த 15 ஆண்டுகளாகவே கணவன்- மனைவி இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில்,  தண்டேலியில் தான் வாங்கிய நிலத்தைத் தனது சகோதரிகள் பெயரில் ஓம் பிரகாஷ் பதிவு செய்ததும், கணவர் மீது பல்லவிக்குக் கோபம் அதிகரித்துள்ளது.

தன் பெயரிலிலோ அல்லது பிள்ளைகள் பெயரிலோ பதிவு செய்யாமல், சகோதரிகள் பெயரில் சொத்தை வாங்கியது ஏன் எனக் கேட்டு, கணவரிடம் தொடர்ந்து பல்லவி சண்டையிட்டு வந்துள்ளார்.  இது தொடர்பாகவே கொலை நடந்த அன்று, சாப்பிடும் போது மீண்டும் இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆத்திரமடைந்த பல்லவி, ஓம் பிரகாஷைக் கொன்றுள்ளார்.

முதலில், கணவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். நிலை தடுமாறிய அவரைக் கட்டி வைத்துள்ளார். பின்னர் குத்தி கொலை செய்துள்ளார்.  மார்பு, வயிறு மற்றும் கையில்  கத்தியால் குத்தியுள்ளார்.  வயிற்றுப் பகுதியில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட முறை, ஆத்திரம் தீரும் வரை மாறி மாறி குத்தியுள்ளார்.   10-க்கும் மேற்பட்ட கத்திகளால் குத்திய பல்லவி  கண்ணாடி பாட்டிலாலும் தாக்கியுள்ளார்.

கீழே சரிந்த ஓம்பிரகாஷ் வலி தாங்காமல் சுமார் 20 நிமிடங்கள் துடிதுடித்து இறந்ததாகவும், அதுவரை எந்த பதற்றமும் இல்லாமல், நாற்காலியில் அசையாமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் பல்லவி தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு, தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, பல்லவி மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், நீண்டகாலமாகவே மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்த ஓம் பிரகாஷ், சமீபத்தில் தான் மீண்டும், வீட்டுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.   தனது மனைவியின் சித்ரவதைகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் பலமுறை ஓம் பிரகாஷ் கூறியதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வுப் பெற்ற டிஜிபி ஓம் பிரகாஷின் மரணத்துக்கான உண்மையான காரணமும்,  எதற்காகக் கொன்றனர் என்பதும் விசாரணையின் முடிவிலும்,பிரேதப் பரிசோதனையின் அறிக்கையின் முடிவிலும் தெரியவரும்.

Tags: கர்நாடகாFormer Karnataka DGP stabbed to death - wife turns out to be Emanமுன்னாள் டிஜிபி கத்தியால் குத்தி கொலை
Share
Tweet
SendShare
Previous Post

குறைந்த செலவில் சூழல் சுற்றுலா – சுற்றுலா தலமாகும் பரளிக்காடு!

Next Post

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முக்கிய தலைவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி திட்டம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies