டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் 6 ஆயிரத்து 567 மேற்பார்வையாளர்கள், 14 ஆயிரத்து 636 விற்பனையாளர்கள் 23 ஆயிரத்து 629 மதுபான சில்லறை விற்பனை கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்துடன் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 64 கோடியே 8 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.