ஆந்திராவில் செல்போனை கொடுக்காததற்காக ஆசிரியையைக் காலணியால் பொறியியல் கல்லூரி மாணவி அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விஜயநகரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாணவி ஒருவர் செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை செல்போனை பறித்துக் கொண்டு வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவி ஆசிரியை தகாத வார்த்தையால் திட்டியதோடு காலணியால் தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.