அதிபர் டிரம்பின் அதிரடி முடிவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது.
இறக்குமதி ஏற்றுமதி வரி உயர்வு, வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலை, அரசு ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.
இது போன்ற முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, டிரம்பிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர்.