ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்தது தொடர்பாக நடிகர் மகேஷ்பாபுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் கடந்த 16ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அதில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்ததற்காக 3 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கிலும், 2 கோடி 50 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும் நடிகர் மகேஷ்பாபு பெற்றுக் கொண்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின்பேரில் வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.