ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் பல நூற்றாண்டு பாரம்பரியம் மற்றும் தொன்மை தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியின் உபசரிப்பு மகிழ்ச்சி அளித்ததாகக் கூறிய ஜே.டி.வான்ஸ், ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுடன் இணைந்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பம் எனவும் அவர் கூறினார்.