சென்னையில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி தவெக ஆதரவாளர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
தவெக ஆதரவாளரும், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சருமான விஷ்ணு என்பவர் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த இளம்பெண் தனது அண்ணனிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணின் அண்ணன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர், விஷ்ணுவைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.