ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை கண்டு சந்தேகமடைந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில் லாரியில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.