ஜம்மு & காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே விடுத்துள்ள பதிவில், ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் சங்கங்களும் தங்கள் வேறுபாடுகளை மறந்து இந்த பயங்கரவாத செயலை கண்டிக்க வேண்டும் எனறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உதவிகளையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த பதிவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.