ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் அறிவுறுத்தலை ஏற்ற அமித் ஷா, டெல்லியில் இருந்து உடனடியாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் விரைந்து சென்றார். தொடர்ந்து அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அமித் ஷாவிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.