வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடைக்கு சென்ற வடமாநில நபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த ரோகுல் அலி என்பவர் வேலூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றபோது அங்கிருந்த யோகராஜ் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் ரோகுல் அலியை மதுபோதையில் தாக்கியுள்ளனர்.
மேலும் அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.