பிராமணர்களை விமர்சித்த சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப், மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ‘புலே’ பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்டார்.