சிஎஸ்கே அணி நிச்சயம் மீண்டு வரும் என அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய காசி விஸ்வநாதன், நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள் என்றும், ஆனால் விளையாட்டில் இது சகஜம் எனவும் கூறியுள்ளார்.
இப்போது நன்றாக விளையாடவில்லை என்பது உண்மைதான் என்றும், நிச்சயம் மீண்டு வருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.