சாய் சுதர்சனை இந்திய ஜெர்சியில் காணக் காத்திருக்கிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார். நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.