எங்குச் சென்றாலும் சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புவதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றது மகிழ்ச்சி என்றும், சிறந்த முறையில் விளையாடி முடிந்தளவு ரன்களை குவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
முன்னிலையில் இருந்தாலும் போட்டியை முடிப்பது முக்கியம் என்றும், நல்ல அணிகள் போட்டியை நன்றாக முடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேசிய அவர், டி 20 கிரிக்கெட்டில் எப்போதும் கச்சிதமான ஆட்டத்தை விளையாட முடியாது எனவும் கூறியுள்ளார்.