கர்நாடக மாநிலம், ராமநகரத்தில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஹலசூரி மலைப்பகுதிக்கு இரண்டு பேருந்துகளில் சுற்றுலாப்பயணிகள் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது சாலை வளைவில் திரும்பும்போது முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
பின்னால் வந்துகொண்டிருந்த பேருந்தும் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.