ஈரோட்டில் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணி அரசு மருத்துவமனை சந்திப்பில் தொடங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.