சிவகங்கையில் 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 73 வயது ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடியை அடுத்த பாப்பாஊரணி பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் முத்து முனியாண்டி, கடந்த 2024-ம் ஆண்டு 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றம் நிரூபணமானதால், ஜோதிடர் முத்து முனியாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.