பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமான பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற கிளை அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
பஹல்காம் பகுதி ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 4 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.