ஆனைமலை, பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்திற்கும், பாண்டியாறு பொன்னமரா திட்டத்திற்கும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இரு திட்டங்களையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் கேரள அரசு செவிசாய்க்கவில்லை என கூறினார். மேலும், கேரள அரசு மெத்தனமாக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தார்.
















