அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பயிர்களுக்கு டோக்கன் வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாகக் கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலை, எள் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், டோக்கன் வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாகவும், இதன் காரணமாக மூன்று நாட்களாகக் காத்திருப்பதாகவும் கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.