திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மாத தவணையை வசூல் செய்யச் சென்ற ஊழியர்களை, கடன் பெற்றவர் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் செங்கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் குளிர் சாதன பெட்டியை மாதத் தவணையில் வாங்கியுள்ளார்.
இரண்டு மாதங்களாகத் தவணை தொகையைக் கட்டாததால் பணத்தை வசூல் செய்ய அவரது வீட்டிற்கு ஊழியர்கள் சென்றுள்ளனர்.
அப்போது பணத்தைத் தர மறுத்து ஊழியர்களை இறைச்சி வெட்டும் கத்தியால் ஜெயவேல் தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.