தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரிப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் பயன்படாத வகையில் இருந்தது.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறையைத் திறக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் விடுத்த கோரிக்கை தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியானது.
இதன் எதிரொலியாக, நட்சத்திர ஏரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.