இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உள்ள கட்டிடங்கள் நிலைகுலைந்து காணப்படுகிறது.
இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த போாில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், வீடுகளை இழந்து உணவுக்குக் கூட சிரமப்படும் நிலைக்கு பாலஸ்தீனியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.