மயிலாடுதுறையில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினர்.
மயிலாடுதுறையில் கடந்த 2 ஆண்டாகக் கனமழை காரணமாக சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.