மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நவோமி ஒசாகா தோல்வியடைந்தார்.
பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாகக் களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, இத்தாலியின் லூசியா ப்ரோனெட்டி உடன் மோதினார்.
இதில் ப்ரோனெட்டி 6க்கு 4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் முதல் சுற்றிலேயே ஒசாகா வெளியேறினார்.