லக்னோவுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டதே டெல்லி அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், போட்டியின் ஆரம்பத்தில் பந்துவீச்சை சிறப்பாகத் தொடங்கவில்லை என்றும், ஆனாலும், நாங்கள் கட்டுக்கோப்பான பந்துவீச்சின் மூலம் ஆட்டத்திற்குள் வந்ததாகவும் கூறியுள்ளார்.
பந்துவீச்சில் சிறப்பான செயல்பாடு இந்த போட்டியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள அவர், சரியான பந்துவீச்சாளர்களை, சரியான இடத்தில் சுழற்சி முறையில் வீச வைத்தது எத்திரணியைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.