பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியவர்,
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் பிரச்சனை என்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாட்டு மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்து, நிச்சயமாகத் தண்டனை தர வேண்டும் என அவர் தெரிவித்தார்.