பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி, சுற்றுலா பயணிகள் என 27 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடியது.
இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.