தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதனையடுத்து கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலைநாளான வரும் 30-ம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளை கவனிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.