அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்தளித்தார்.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அமைந்ததை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி தடபுடலாக இரவு விருந்து வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா உட்பட பல்வேறு அசைவ உணவுகள் மற்றும் சைவ உணவுகள் பரிமாறப்பட்டன.