தமிழகத்தில் மையோனைஸ் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மையோனைஸ் சாப்பிடுவதால், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடை ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை முட்டைகளால் செய்யப்படும் மையோனைஸை உண்பதால் அதிக ஆபத்து ஏற்படுவதாக தமிழக அரசு எச்சரித்துள்ளது.