மாஞ்சோலை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை வெளியேற்ற அரசு அதிகாரிகள் முயலும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாஞ்சோலையில் காவல்துறை பாதுகாப்புடன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் வீடு வீடாக சென்று அங்கு வசிக்கும் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை வெளியேற வற்புறுத்துவது தொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும், மூளை சலவை செய்வதும் தங்களுக்கு வேதனையை தருவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.