திரைப்படங்களில் நடிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது பரபரப்பு குற்றச்சாட்டை நடிகை வின்சி அலோசியஸ் முன்வைத்தார்.
இதற்கு மத்தியில் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக ஒரு நபரைத் தேடி போலீசார் சோதனை நடத்தியபோது, ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார்.
இந்த நிலையில், சாக்கோ திரைப்படங்களில் நடிக்கத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உன்னி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.