சூரி நடிப்பில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி விடுதலை படத்தின் மூலமாகக் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து வெட்டுக்காளி, கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இதற்கிடையே, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் மே 16-ம் தேதி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வைரலாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.