திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
கனகம்மாசத்திரம் நடு பஜாரில் கும்பல் ஒன்று பேசிக் கொண்டிருந்தபோது அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது வழக்கறிஞர் சதீஷ் என்பவரை நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென்று சுற்றி வளைத்து சரமாரியாகத் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இச்சம்பம் தொடர்பான புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கடனாகக் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டதால் வழக்கறிஞர் சதீஷை தாக்கியது தெரியவந்துள்ளது.