ஆஸ்திரேலியாவில் 17 வயது சிறுவன் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தை 9.99 வினாடிகளில் ஓடி அசத்தியுள்ளார்.
2008-ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட உசேன் போல்ட், 9.69 வினாடிகளில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை படைத்தார்.
அதேப்போல், 200 மீட்டர் ஓட்டத்தை 19.30 வினாடிகளில் ஓடி அசத்தினார். அந்தவகையில், உசேன் போல்ட்டை ஓட்டத்தை நெருங்கும் வகையில் தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தை 9.99 வினாடிகளிலும், 200 மீட்டர் ஓட்டத்தை 19.84 வினாடிகளிலும் ஓடி முடித்துள்ளார்.