காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையம் எதிரே அஞ்சலி செலுத்திய பாஜகவினர் மோட்ச தீபம் ஏற்றியதோடு தீவிரவாதத்திற்கு எதிராகக் கண்டன கோஷம் எழுப்பினர். உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் மதுரை மாநகர் பாஜக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 27 பேருக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளால் 27 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து தேனியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது இந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தான் காரணம் எனக் கூறி அந்நாட்டின் தேசியக் கொடி மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதியின் புகைப்படத்தினை தீயிட்டு எரித்ததோடு பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.