சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கோயில் திருவிழாக்களை ஒட்டி அக்னிச்சட்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள
வீரபாண்டி ஸ்ரீ கெளரி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது.
இதனையொட்டி பக்தர்கள் அக்னி சட்டிகள் ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் மண்பாண்டம் தயாரிப்பிற்குப் புகழ்பெற்ற மானாமதுரையில் அக்னிசட்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அக்கினிச்சட்டிகளுக்கு ஆர்டர் வந்துள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவற்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.