ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் கடும் அவதிக்கு ஆளானதாக நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் 350 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அண்மையில் திறக்கப்பட்டது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காலை 5.30 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜெனரேட்டர் இயக்கப்படாததால் உள் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். நோயாளிகள் மட்டுமின்றி பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
எனவே, மின்தடை ஏற்படாமல் தடுக்கவும், ஜெனரேட்டர்களை உரிய நேரத்தில் இயக்கவும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.