கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டப்பேரவையில் சிறப்புக் கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது திமுக, காங்கிரஸ், பாமக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர்.
இதையடுத்து சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கருணாநிதி பெயரால், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கூறினார்.