சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள தனியார் பேக்கரியில் சர்வ சாதாரணமாக நுழைந்த பெண், பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
தீவட்டிப்பட்டி காவல் நிலையம் எதிரே பிரபாகரன் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் பேக்கரியின் சட்டரை உள்பக்கமாக மூடிவிட்டு பிரபாகரன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை சட்டரை லேசாகத் தூக்கி உள்ளே நுழைந்த பெண் கல்லாவில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார்.