சென்னையில் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஓய்வூதியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மகளிர் உரிமைத்துறை இயக்ககத்தை முற்றுகையிட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர், குறைந்தபட்ச சிறப்பு ஓய்வூதியம் 6 ஆயிரத்து 750 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க பொதுச்செயலாளர் மாயமலை, தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாகப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.