யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அதில் பங்கேற்ற 9 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து 9 பேரையும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அழைத்த ஆளுநர் ரவி, வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பின்னர் அவர்களுக்குக் கம்பராமாயணம் புத்தகத்தையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், நல்ல புத்தகங்களை மாணவர்கள் அன்றாடம் படிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார். நமது பழமையான நாட்டைப் பற்றியும், நாகரிகத்தைப் பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். நமது தாய் நாட்டை அன்பு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.