செங்கல்பட்டு அருகே ஆட்டோவில் சென்ற தனது மனைவியைக் காணவில்லை என ஊராட்சி மன்ற துணை தலைவர், சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் ஜோசஃப். இவரது மனைவி டெய்சி ராணி கடந்த 21-ம் தேதி மகனுடன் ஏற்பட்ட சண்டையில் கோபித்துக் கொண்டு, வீட்டருகே இருந்த ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஆட்டோவில் ஏறிச்சென்ற தனது மனைவியை அதன்பின் காணவில்லை எனக்கூறி, சிசிடிவி ஆதாரத்துடன் ஜோசஃப், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஓட்டுநர் யார் என்பதை அறிந்து, தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு ஜோசஃப் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.