இந்தியாவில் தனது 4 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அரசுமுறை பயணமாக இந்திய வந்திருந்த அவர், ஜெய்ப்பூரில் உள்ள அமெர் கோட்டை மற்றும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை குடும்பத்தினருடன் பார்வையிட்டார்.
ஜெய்ப்பூர் மாளிகைக்குச் செல்லவிருந்த ஜே.டி.வான்ஸின் பயணம் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.