இந்தியக் கடலோர காவல்படை சார்பில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நடுக்கடலில் சென்றுகொண்டிருக்கும் படகில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.
நாகையிலிருந்து இலங்கை செல்லும் பயணி படகில் தீ விபத்து ஏற்படுவது போல ஒத்திகை நடைபெற்றதையடுத்து, கடலோர பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெறுவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காரைக்கால், நாகை மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.