முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்ப ஆதிக்க ஆட்சியில் இருந்து விண்வெளித்துறை கூட தப்பவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் புதிய விண்வெளி கொள்கை மூலம் முதலமைச்சர் ஸ்டாலின், வானம் ஸ்பேஸ் என்ற பெயரில் புதிய அவதாரம் எடுத்துள்ளதாகவும், 11 வார திண்ணை பிரச்சாரம் மூலம் இது குறித்த உண்மைகளைத் தமிழக மக்களிடம் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.