எதிரிநாட்டு இலக்குகளைத் துல்லியமாக அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாகச் செயல்பட்டுள்ளது தெரியவந்த நிலையில், அந்நாட்டிற்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இதற்கிடையே இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகக் கருதி பாகிஸ்தான் ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியக் கடற்படை, ஏவுகணை சோதனை மேற்கொண்டது.
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சூரத் போர் கப்பலில் இருந்து, எதிரிநாட்டு இலக்குகளைத் துல்லியமாக அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை இந்தியக் கடற்படையின் மற்றுமொரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.